கோலாலம்பூர், பிப் 5 - தைப்பூசத்தை முன்னிட்டு, கெடா மாநிலத்திற்கு பிப்ரவரி 11-ஆம் தேதி சிறப்பு பொது விடுமுறை வழங்க கெடா மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
1951 பொது விடுமுறைச் சட்டம், சட்டம் 369 செக்ஷன் 9 (1)-இன் கீழ், கெடா மாநிலத்தில், தைப்பூசத்திற்கான பொது விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாக, மாநில துணைச் செயலாளர் டத்தோ டாக்டர் நட்ஸ்மான் முஸ்தாஃபா தெரிவித்தார்.
கெடா மாநில இந்துக்கள் தைப்பூசத்தை கொண்டாடும் வகையில், மாநில அரசாங்கம் விடுமுறை வழங்க அனுமதித்ததாக,க் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி அதன் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ முஹ்மட் சனுசி முஹ்மட் நோர் கூறியிருந்தார்.


