சிகிஞ்சான், பிப் 5: முன்னதாகப் பண்டிகை காலங்களில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இலவச டோல் சேவைக்குப் பதிலாக இவ்வாண்டு 50 விழுக்காட்டு கழிவு வழங்கப்படும்.
இதன்வழி, ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரிங்கிட் வரை அரசாங்கம் சேமிக்க முடியும் என்றும் இலவச டோல் சேவை வழங்கப்பட்டால் 10 கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியை அரசாங்கம் செலவிட வேண்டியிப்பதாகப் பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
இதற்கு முன்பு செயல்படுத்தப்பட்டது போலவே, ஆண்டுக்கு எட்டு நாள்களுக்கு அமல்படுத்தப்படும் இந்தத் கழிவு, இலக்கிடப்பட்ட உதவி அணுகுமுறைக்கு மாறுவதற்கான அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப உள்ளதாக அவர் கூறினார்.
எனவே, நோன்பு பெருநாள் காலத்திலும் அதற்குப் பிறகும் இந்த கழிவை தொடர்ந்து வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.


