கோலாலம்பூர், பிப் 5: எதிர்வரும் 10ஆம் திகதி சிலாங்கூர் மாநில அளவிலான 2025ஆம் ஆண்டிற்கான தைப்பூசம் கொண்டாட்டம் பத்து கேவ்ஸ் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கலை நிகழ்ச்சிகள், உணவுகள் மற்றும் இனிப்பு பலகாரங்கள் வழங்குதல் போன்ற பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அதில் முக்கிய அங்கமாக கோவில்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வு நடைபெறும் என மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, அன்றைய நாளில் கெர்லிங்கில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்திலும் மறுநாள் கோலா சிலாங்கூரில் உள்ள ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்திலும் அங்குள்ள கோவில்களுக்கு மானியம் வழங்கப்படும் என அவர் விவரித்தார்.





