ஷா ஆலம், பிப். 5 - கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் காணாமல்
போனதாகப் புகார் செய்யப்பட்ட பெண் கோல சிலாங்கூர், பந்தாய் ரெமிஸில்
கார் ஒன்றில் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.
வாகன நிறுத்துமிடத்திலிருந்து காரில் அப்பெண்ணின் சடலம் இருப்பதை
அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை உறுப்பினர்கள்
விடியற்காலை 2.00 மணியளவில் கண்டதாக கோல சிலாங்கூர் மாவட்ட
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் தாஜூடின் கூறினார்.
அந்த காரின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் தீயணைப்புத் துறையின்
உதவியுடன் அப்பெண்ணின் உடல் காரிலிருந்து மீட்கப்பட்டது என்று அவர்
குறிப்பிட்டார்.
அப்பெண்ணின் உடலில் காயங்கள் அல்லது குற்றத்தன்மைக்கான அறிகுறி
தென்படவில்லை என்பது தொடக்கக் கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது எனக் கூறிய அவர். இச்சம்பவம் தற்போதைக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
அப்பெண்ணின் உடல் சவப்பரிசோதனைக்காக தஞ்சோங் காராங்
மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் இந்த சம்பவம்
தொடர்பில் தகவலறிந்தவர்கள் கோல சிலாங்கூர் போலீஸ்
தலைமையகத்தை தொடர்பு கொள்ளும்படியும் அவர் கேட்டுக கொண்டார்.
அந்த பெண் கடந்த ஜனவரி 31ஆம் தேதி டாமன்சாராவில் காணாமல்
போனதாகப் புகார் செய்யப்பட்டது.


