சுபாங் ஜெயா, பிப் 4: பெட்டாலிங் ஜெயா நகரில் சட்டவிரோதமாக மேசைகள் மற்றும் நாற்காலிகளை பொது வாகன நிறுத்துமிடங்களில் வைத்த மூன்று உணவகங்களுக்கு எதிராக பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) அபராதம் விதிக்கும் நடவடிக்கையை அமல்படுத்தியது.
ஜனவரி 24 அன்று காவல்துறை மற்றும் குடிவரவுத் துறையுடன் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் விளைவாக, விதிமுறைகளை மீறி SS2/24, Jalan 21/1 மற்றும் Jalan 20/14 ஆகிய இடங்களில் அமைந்துள்ள மூன்று உணவகங்களை அவரது தரப்பு அடையாளம் கண்டதாக பெட்டாலிங் ஜெயா மேயர் முகமட் ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்.
"இந்த மூன்று உணவகங்களுக்கும் ஆறு மாதங்களுக்குள் உரிமம் வழங்கப்பட்டது, ஆனால், அதன் பிறகு அவற்றை நீட்டிக்கவும் மற்றும் கட்டணத்தை செலுத்தவும் இல்லை. அந்த உணவங்களில் சட்டவிரோத வெளிநாட்டு ஊழியர்களும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
"குறிப்பிட்ட வளாகத்தில் மேசைகள் மற்றும் நாற்காலிகள் அனுமதியின்றி நடைபாதைக்கு இடையூறாக உள்ளன. கூடுதலாக, இந்த அனைத்து கடைகளின் தூய்மையின் அளவு திருப்திகரமாக இல்லாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக," அவர் கூறினார்.


