ஷா ஆலம், பிப் 4: பிப்ரவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்கில் KTM பயணிகளுக்கு இலவச ரயில் பயண சேவை வழங்கப்படும்.
கடந்த ஆண்டு பயணிகளின் எண்ணிக்கையை விட இவ்வாண்டு 10% அதிகமான மக்கள் இச்சேவையைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிப்ரவரி 11 அன்று உச்சத்தை எட்டும் என்று போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் கூறினார்.
பயணிகள், குறிப்பாக இந்துக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் தைப்பூசக் கொண்டாட்டத்தைக் காண விரும்பும் பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, பிப்ரவரி 9 முதல் 12 வரை நான்கு நாட்களுக்கு கூடுதல் KTM கோமுட்டர் சேவைகள் 24 மணிநேரமும் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 10 நிமிட இடைவெளியில் `Pasar Seni hub, ``Gombak LRT` மற்றும் `Kg Baru MRT` இலிருந்து பத்து கேவ்ஸ் இலவச ஷட்டில் சேவைகளை RapidKL வழியாக `Prasarana Malaysia Bhd` வழங்கும் என்று லோக் மேலும் கூறினார்.
"இந்த முன்முயற்சியானது போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று லோக் கூறினார்.
தைப்பூசத்திற்கு பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த விரும்பும் பொதுமக்கள் தங்கள் பயணங்களைத் திட்டமிடுவார்கள் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.


