கோலாலம்பூர், பிப். 4 - மலேசிய ஆயுதப்படைகளின் (ஏ.டி.எம்.) புதிய தளபதி ஜெனரல் டத்தோ முகமது நிஜாம் ஜாபருக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இஸ்தானா நெகாராவில் இன்று பேட்டியளித்தார்.
முன்னாள் ஆயுதப்படைகளின் தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ முகமது அப்துல் ரஹ்மானையும் மாமன்னர் சந்தித்ததாக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூலில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசிய ஆயுதப்படைத் தலைமையகத்தில் பணியாளர் சேவைகளுக்கான உதவித் தலைமைத் தளபதியாக (ஏகேஎஸ் பிஏ) பதவி வகித்த முகமது நிஜாம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி 23வது ஆயுதப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
ஆயுதப் படையில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் பணியாற்றிய பிறகு கட்டாய ஓய்வு பெற்ற முகமதுவுக்குப் பதிலாக முகமது நிஜாம் அப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயுதப்படைக்கு வழங்கிய சேவை மற்றும் பங்களிப்புகளுக்கு சுல்தான் இப்ராஹிம் முகமதுவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாக அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.


