கோலாலம்பூர், பிப் 4: கடந்த டிசம்பர் 16ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக சட்ட மசோதாவின் அமலாக்கத்தின் வழி இணையக் குற்றங்கள் மற்றும் மோசடிகள் போன்ற குற்றச்செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றங்களைத் தடுப்பதற்கும் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதற்கும் சில புதிய விதிமுறைகளை அச்சட்ட மசோதா அறிமுகப்படுத்தும் என்று தொடர்பு அமைச்சர், ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
"அதே நேரத்தில் மோசடிகள் குறித்து மக்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.


