NATIONAL

சேகுபார்ட் மன்னிப்பு விவகாரம் - அவதூறுகளை நிராகரிக்க மந்திரி புசார் வேண்டுகோள்

4 பிப்ரவரி 2025, 3:57 AM
சேகுபார்ட் மன்னிப்பு விவகாரம் - அவதூறுகளை நிராகரிக்க மந்திரி புசார் வேண்டுகோள்

ஷா ஆலம், பிப் 4 - லாண்டசன் லுமாயான் சென். பெர்ஹாட் நிறுவனம் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக  சமூக ஆர்வலர் பட்ருல் ஹிஷாம் ஷஹாரின் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து, அவதூறு அரசியலுக்கு எதிராக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று எச்சரிக்கை விடுத்தார்.

இன்று உண்மை பொய்களை வென்றது. இந்த அவதூறு பெரிகத்தான் நேஷனல் கட்சியால் கடந்த மாநிலத் தேர்தலின் போது பரப்பப்பட்டது. சிலாங்கூர் அரசாங்கத்தின் மீதும் என் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பெரிக்கத்தான் உருவகப்படுத்திய  அவதூறு கதையுடன் என்னை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று மந்திரி புசார் தனது முகநூல் பதிவில் கூறினார்.

நான் பல முறை  மறுப்புகளையும் ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன். மேலும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் மறுத்துள்ளேன்.

பெரிகாத்தான் நேஷனலுடன் ஊறிப்போன  அவதூறு கலாச்சாரம் என்பது ஒரு ஆழமற்ற கலாச்சாரம் என்பதை இது நிரூபிக்கிறது. அவதூறு அரசியலை நிராகரிப்போம் என்று அவர் கூறினார்.

சேகுபார்ட் என்று அழைக்கப்படும் பட்ருல், தனக்கு எதிரான அவதூறு வழக்கில் சமரசத் தீர்வுக்கான உடன்பாடு  எட்டப்பட்டதைத் தொடர்ந்து மன்னிப்பு கோரினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.