கோலாலம்பூர், பிப். 3 - வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஊழியர் சேம நிதி வாரியத்தில் இரண்டு விழுக்காடு சந்தா செலுத்தும் முறையை அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தொடக்கத்தில் பரிந்துரைக்கப்பட்ட 12 விழுக்காட்டு சந்தா தொகையை விட இது குறைவாகும் என அவர் சொன்னார்.
இருப்பினும், இது இரண்டு சதவீதத்தில் தொடங்கி நான்கு சதவீதம் மற்றும் ஆறு சதவீதமாக உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆனால், அப்படி இல்லை. நாங்கள் அதை 2 விழுக்காடாக வைத்திருப்போம். இது மிகக் குறைந்த அளவாகவே உள்ளது என்று அன்வார் குறிப்பிட்டார்.
மலேசிய சீன வர்த்தக மற்றும் தொழிலியல் மன்றச் சம்மேளனம் ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு விருந்து நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
வர்த்தக சபையின் பரிந்துரைகளை அமைச்சரவை பரிசீலித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.


