போர்ட் டிக்சன், பிப் 3 - அனைத்துலக அளவில் நடைபெற்ற சீலாட் போட்டியில் வெற்றியாளராகி, மலேசியவை உலக அரங்கில் பெருமைப்படுத்திய சார்ஜன் தமராஜ் வாசுதேவனுக்கு `PISAU TENTERA DARAT` எனும் விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு டிசம்பரில் ஐக்கிய அரபு சிற்றரசு, அபு டாபியில் நடைபெற்ற 20-வது உலக சீலாட் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அரச மலேசிய இராணுவக் காவல்படையில் பணிபுரியும் 29 வயதான தமராஜ் பெற்றுத் தந்தார்.
இந்த விருது தமது உழைப்பிற்கும் ஈடுபாட்டிற்கும் கிடைத்த மாபெறும் அங்கீகாரம் என்று தமராஜ் கூறினார்.


