கோலாலம்பூர், பிப் 3 – அரசாங்க கிளினிக்குகளில் நோயாளிகளின் காத்திருப்பு நேரம் மூன்று மணியிலிருந்து 30 நிமிடங்களாக குறைத்துள்ளது சுகாதார அமைச்சின் வெற்றியை புலப்படுத்துகிறது என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
சுகாதார சேவையில் இலக்கியல் உருமாற்றம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் இந்த வெற்றி கிடைத்துள்ளது. சேவையை மேம்படுத்துவதற்கு வரயப்பட்ட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டிய ஆண்டாக 2025ஆம் ஆண்டு இருப்பதாக அவர் கூறினார்.
அரசாங்க கிளினிக்குகளில் நோயாளிகளின் காத்திருக்கும் நேரத்தை மூன்று மணி நேரங்களிலிருந்து 30 நிமிடங்களாக குறைப்பதில் நாங்கள் முன்னுரிமை வழங்கியுள்ளோம்.
2007 முதல் 2022 ஆம் ஆண்டுவரை 107 கிளினிக்குகள் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு அதன் எண்ணிக்கையை 159ஆக அதிகரித்துள்ளோம்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கிளினிக்களில் 48 .6 விழுக்காடு நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இந்த ஆண்டு பொருத்தமான ஒன்றாகும் என X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.


