கலிஃபோர்னியா, பிப் 3 - அமெரிக்காவின் தென் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட மோசமான காட்டுத் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெரும் போராட்டத்துக்குப் பிறகு சரியாக 24 நாட்களில் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாக தீயணைப்புத் துறை தெரிவித்தது.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலமும் ஆயிரக்கணக்கான கட்டடங்களும் வீடுகளும் தீயில் முற்றாக அழிந்துபோயின.
வரலாறு காணாத அளவுக்கு நகரங்கள் பற்றி எரிந்ததால், கலிஃபோர்னியாவும் லாஸ் ஏஞ்சலஸும் உலகம் முழுவதும் பேச்சுப் பொருளாகின.
தீ ஏற்பட்டதற்கான உண்மைக் காரணம் இன்னமும் விசாரணையில் உள்ளது.


