கோலாலம்பூர், பிப் 3 – ஊழியர் சேமநிதி வாரியமான EPF கணக்கில் தன்னார்வ முறையில் சந்தா பங்களிக்கும் திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
கடந்தாண்டு மட்டுமே 13 பில்லியன் ரிங்கிட் சந்தா, தன்னார்வ முறையில் செலுத்தப்பட்டுள்ளது. இது ஊழியர் சேமநிதி வாரியத்தில் தங்களின் பணத்தைச் சேமித்து வைப்பதில் பொது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை புலப்படுத்துகிறது.
கடந்த 20, 30 ஆண்டுகளாகவே உயரிய அதே சமயம் நிலையான இலாப ஈவுத் தொகையை ஊழியர் சேமநிதி வாரியம் வழங்கி வருவதே அதற்குக் காரணமாகும்.
அந்த 1.6 மில்லியன் பேரில் 1.2 மில்லியன் சந்தாத்தாரர்கள் i-Saraan திட்டத்தின் கீழும் பங்களிப்புச் செய்தவர்கள் ஆவர்.
இந்த i-Saraan திட்டமானது, சுயத் தொழில் செய்பவர்கள் மற்றும் நிலையான வருமானம் இல்லாத சாதாரணத் தொழிலாளர்கள், தன்னார்வ முறையில் சந்தா பங்களிப்புச் செய்வதற்காக உருவாக்கப்பட்டது.
i-Saraan திட்டத்தின் கீழ் பங்களிப்பாளர்கள் தங்களின் மொத்த தன்னார்வ பங்களிப்புகளுக்கு அரசாங்கத்திடமிருந்து 20 விழுக்காடு முதல் அதிகபட்சம் 500 ரிங்கிட் வரை சிறப்பு ஊக்கத்தொகையைப் பெறுவார்கள்.


