நெய்பிடாவ், பிப்ரவரி 1 - மியான்மரின் ஆளும் இராணுவம் அவசரகால நிலையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக அரசு ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளன.
பத்தாண்டு கால ஜனநாயக ஆட்சிக்குப் பிறகு நாட்டை குழப்பத்தில் ஆழ்த்திய இராணுப் புரட்சி நிகழ்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவிலியன் அரசாங்கத்தை இராணுவம் கவிழ்த்ததால் தூண்டப்பட்ட உள்நாட்டுப் போரில் மியன்மார் சிக்கியுள்ளது.
இவ்வாண்டு தேர்தலை நடத்த ஜூந்தா திட்டமிட்டுள்ளது. பினாமிகள் மூலம் தளபதிகளை அதிகாரத்தில் வைத்திருப்பதற்கான ஏமாற்று வேலை இது என்று விமர்சகர்கள் கேலி செய்துள்ளனர்.
பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்த இன்னும் பல பணிகள் உள்ளன. குறிப்பாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு நிலைத்தன்மை மற்றும் அமைதி இன்னும் தேவை என அரசு நடத்தும் எம்.ஆர்.டி வி. தனது டெலிகிராம் சேனலில் அவசரகால நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பின் போது குறிப்பிட்டது.
தேர்தலுக்கு எந்த தேதியும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் இராணுவ ஆட்சிக்குழு நாட்டை நடத்த போராடினாலும் பல முனைகளில் ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தலைமையிலான எழுச்சிக்கு மத்தியில்
இராணுவம் தனது திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது.
சண்டை காரணமாக மூன்று மில்லியன் மக்களை இடம்பெயர்ந்துள்ளதோடு பரந்த உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் பேசாசுவார்த்தையில் ஈடுபடும்படி அதன் ஐ.நா. சிறப்புத் தூதர் அனைத்துத் தரப்புகளையும் வலியுறுத்தியுள்ளன.


