ஷா ஆலம், பிப்.1 - மாநிலச் செயலாளர் பணியிலிருந்து நேற்று அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்ற டத்தோ ஹாரிஸ் காசிமின் சேவைக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நன்றி தெரிவித்துள்ளார்.
ஹாரிஸ் தனது பணியில் காட்டிய தொழில் நிபுணத்துவ ஆர்ப்பணிப்பு அவரை சேவையில் ஒரு முன்மாதிரியான நபராக ஆக்கியுள்ளது என்று மந்திரி புசார் கூறினார்.
நான் 2018 இல் மத்திரி புசாராக நியமிக்கப்பட்டது முதல் டத்தோ செத்தியா ஹாரிஸ் தனது கடமைகளைச் செய்வதில் கடைபிடித்த தொழில்முறை நிபுணத்துவத்திற்காக தனிப்பட்ட முறையில் நான் மிகவும் பாராட்டுகிறேன்.
அரசு ஊழியர்கள் மற்றும் பங்களிப்பாளர்களுடனான அவரது நட்புறவு மாநிலத்தின் அன்றாட நடவடிக்கைகளை எளிதாக்கி அவரை பாலமாக வைத்துள்ளது என்று அமிருடின் தனது முகநூல் பதிவில் கூறினார்.
உங்கள் தோழமை மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. மேலும் நீங்கள் மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் ஓய்வு பெற வாழ்த்துகள் என்று அவர் தெரிவித்தார்.
ஹாரிஸின் சேவை மற்றும் வேலைக்கான உயர்ந்த அர்ப்பணிப்பை பாராட்டிய அவர்,
தாமும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிலாங்கூர் அரசாங்கத்தில் உள்ள அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டார்.


