மாமன்னரின் உரையுடன் நாடாளுன்றக் கூட்டத் தொடர் திங்களன்று தொடங்குகிறது
கோலாலம்பூர், பிப்.1- பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் நான்காம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் ஆற்றவிருக்கும் உரை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாட்சிமை தங்கிய பேரரசர் மக்களவை மற்றும் மேலவைக் கூட்டங்களை ஏக காலத்தில் தொடக்கி வைத்து அரச உரையாற்றுவார்.
பேரரசரின் அரச உரையில் நாட்டின் மேம்பாடு தொடர்பான விவகாரங்கள் மற்றும் 2025 ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியாவின் பங்களிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் நான்காம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரின் தொடக்க நிகழ்வை வரும் திங்கள்கிழமை காலை 10.00 மணி தொடங்கி அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி நிலையங்களும் இணையத் தளங்களும் நேரடியாக ஒளிபரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவையில் அரச உரையாற்றுவதற்கு முன்னர் மாமன்னர் அவர்கள் நாடாளுமன்றச் சதுக்கத்தில் நடைபெறும் சுங்கை பீசி முகாமைச் சேர்ந்த அரச மலாய் இராணுவப் பட்டாளத்தின் மரியாதை அணிவகுப்பை பார்வையிடுவார்.
அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் மற்றும் அரச உரை மீதான விவாதங்கள் மக்களவையில் 18 நாட்களுக்கு நடைபெறும் என்றும் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி உறுப்பினர்கள் இதன் தொடர்பான விவாதங்களில் கலந்து கொள்வர் என்றும் நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் கேள்வி பதில் அங்கம் பிப்ரவரி 19 முதல் 25 வரை நடைபெறும்


