ஷா ஆலம், ஜன. 30 - 'காகாசன் ரும்புன் சிலாங்கூர் 2024' இறுதிக் கட்ட நிகழ்வு வரும் ஏப்ரலில் கோம்பாக்கில் நடைபெறும் என்று ஒற்றுமைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா மற்றும் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி புசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று அவர் கூறினார்.
"2025ஆம் ஆண்டிற்கான காகாசான் ரும்புன் சிலாங்கூர் நிகழ்வை ஒன்பது மாவட்டங்களிலும் நடத்துவதற்கு முன், 2024ஆம் ஆண்டிற்கான இறுதி மாவட்டத்தைக் குறிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் கோம்பாக்கில் நடத்தப்படும் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு நிழ்வு 2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் இயக்கத்தை முன்னிட்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் விளம்பரங்களுடன் கோம்பாக் திட்டத்திற்கான முழு நிகழ்ச்சி நிரல் திட்டமிடப்பட்டு வருவதாகவும் ரிசாம் கூறினார்.


