கூலிம், ஜன 28: மலேசியா மருத்துவ சுற்றுலாவிற்கான மையமாக வளர்வதை சில சட்ட விரோத சக்திகள் அவர்களின் ஏமாற்று மற்றும் போலி வேலைகளுக்கும் , சட்டவிரோத செயல்களுக்கும் பயன்படுத்த போலி மருத்துவ சான்றிதழ்களுடன் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பர்களை தடுக்க அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது..
அண்டை நாடுகளின் கவனத்தை நாட்டின் மருத்துவ துறை ஈர்த்துள்ள நிலையில், குறிப்பாக இந்தோனேசியர்கள் சுகாதார சேவையை பெறுவதற்கு பினாங்கு, மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களை தேர்வு செய்வதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
''அதற்கான கோரிக்கை அதிகமாக இருப்பதால் போலி சிகிச்சையகம், போலி மருத்துவர்கள் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன. ஆனால், அவர்களால் குடிநுழைவுத்துறை செயல்முறையை எளிதில் கடந்து விட முடியாது. குடிநுழைவுத்துறை தொடர்ந்து கவனமாக இவ்விவகாரத்தை நிர்வகிக்கும்,'' என்றார் அவர்.
கோலாலம்பூர் முழுவதும் அந்நிய நாட்டினர் நடத்தும் மருத்துவ சிகிச்சையகத்தில் மலேசிய குடிநுழைவுத்துறை சுகாதார அமைச்சுடன் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், வங்காளதேசத்தைச் சேர்ந்த 10 ஆடவர்கள் கைது செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.


