கோலாலம்பூர், ஜன 28: நாளை கொண்டாடவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் "சுங்கை பூலோ உணவு கூடை" நன்கொடையை பெற்றனர்.
இவ்விழாவில், மாண்டரின் ஆராஞ்சு பழங்கள் மற்றும் ஆங் பாவ் வழங்கியதாக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
"இந்த சீனப் புத்தாண்டில் நாம் அனைவரும் அன்பைப் பரப்புவோம். இப்பண்டிகையை குடும்பம், நண்பர்கள் மற்றும் மலேசியர்களுடன் மகிழ்ச்சியான சூழ்நிலையில் கொண்டாடுவோம்" என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், இந்த பாம்பு ஆண்டு நாட்டிற்கும் மலேசிய மக்களுக்கும் அதிக செழிப்பையும், நல்வாழ்வையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என்று நம்புகிறார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடாணி அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
– பெர்னாமா


