கோலாலம்பூர், ஜன 28 – இவ்வாண்டு சீனப் புத்தாண்டை முன்னிட்டு 23ஆவது ஒப் செலமாட் பாதுகாப்பு சோதனை நடவடிக்கையின் போது ரோந்து பணிகளை கோலாலம்பூர் காவல்துறையினர் தீவிரப்படுத்துவர் என மாநகர் கவல்துறை துணைத்தலைவர் டத்தோ அஸ்ரி அக்மர் அயோப் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை பிப்ரவரி 2ஆம் தேதி வரை நடைபெறும். போக்குவரத்து சுமுகமாக இருப்பதை உறுதி செய்வதுடன் குற்றத் தடுப்பு ரோந்து மற்றும் இதர பணிகளிலும் ஈடுபடுவதற்கு 363 காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டு போக்குவரத்து சுமூகமாக இருப்பது மற்றும் சாலையை பயன்படுத்துவோர் பாதுகாப்புடன் இலக்கை சென்றடைவதை உறுதிப்படுத்த சாலை பாதுகாப்பு இயக்கம் கவனம் செலுத்தும் என அவர் கூறினார்.
மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய 58 இடங்கள் மற்றும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் 16 பகுதிகளையும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.


