சுபாங், ஜன 28 - மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் விடுத்த அழைப்பின் பேரில் மலேசியாவிற்கு அலுவல் பயணம் மேற்கொண்ட இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ நேற்று மாலை தமது நாட்டிற்கு புறப்பட்டார்.
பிரபோவோ மற்றும் அவரின் பேராளர்களுடன் அரச மலேசிய ஆகாயப் படை விமானத் தளத்திலிருந்து மாலை மணி 6.25-க்கு விமானம் புறப்பட்டது.
மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான வலுவான மற்றும் சிறப்புமிக்க நட்புறவை இந்த அரசுப் பயணம் பிரதிபலிக்கிறது மற்றும் மாட்சிமை மிக்க சுல்தான் இப்ராஹிம் மலேசியாவின் மன்னராகப் பதவியேற்ற பிறகு வெளிநாட்டுத் தலைவரின் முதல் அரசுப் பயணம் இதுவாகும் என வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
பிரபோவோவின் மலேசிய பயணம் தொடர்பிலான புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் சுகியோனோவிடம் இயற்கைவளம், இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் முன்னதாக ஒப்படைத்தார்.


