கோலாலம்பூர், ஜன 27: தேசிய தகவல் பரப்பு மையமான நாடி ஏற்பாடு செய்துள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் மூலம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் சுய திறன்களை வலுப்படுத்திக் கொள்ளவும் மக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் இலவசமாகப் பதிவு செய்வதன் வழி தொழில்துறை, வேலை வாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மக்களுக்கு உதவுவதாகப் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
சுங்கை பிசி, பண்டார் துன் ரசாக்கில் நாடி மையத்தை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது டாக்டர் வான் இஸ்மாயில் இவ்வாறு தெரிவித்தார்.
வாழ்நாள் முழுவதற்குமான கற்றல் நடவடிக்கை, பெரியவர்கள் மற்றும் சிறார்களுக்கான தொழில்நுட்ப பட்டறை மற்றும் இலக்கவியல் கல்வி பயிற்சிகளுக்கு நாடி வாய்ப்புகள் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.


