கோலாலம்பூர், ஜன 27: பிள்ளைகளின் பள்ளி தயார்நிலை தேவைகளில் பெற்றோரின் சுமையைக் குறைக்க உதவும் வகையில் உதவிக்கரம் நீட்டுமாறு தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
மாணவர்கள் கற்றலை இடையில் கைவிடுவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு இந்த உதவி மறைமுகமாக ஆதரவளிக்கும் என்று, பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
அதோடு, மாணவர்கள் உயர்க்கல்வியைத் தொடரும் வரை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
கோலாலம்பூர், பண்டார் துன் ரசாக்கில் நடைபெற்ற மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.


