கோத்தா டமான்சாரா, ஜன 27 - SHMMP எனப்படும் பெருநாட் கால அதிகபட்ச விலை திட்டத்தைப் பின்பற்ற தவறும் சிலாங்கூர் மாநில வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனவரி 25-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2-ஆம் தேதி வரை இத்திட்டத்தைக் கண்காணிக்கும் நடவடிக்கை, ஒன்பது நாள்களுக்கு மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
சிலாங்கூர் கோத்தா டமான்சாராவில் உள்ள பல்பொருள் அங்காடியில் SHMMP திட்ட அமலாக்கத்தைப் பார்வையிட்ட பின்னர், டத்தோ ஶ்ரீ அமிருடின் இவ்வாறு கூறினார்.
பண்டிகைக் காலம் முழுவதும் பயனீட்டாளர்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமையும் என்று அவர் தெரிவித்தார்


