ஜாலான் பினாங், ஜன 27 - மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் வர்த்தகம் மற்றும் முதலீடு மட்டும் சார்ந்து இல்லாமல், இரு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்திற்கான பரஸ்பர புரிதலையும் மரியாதையையும் உள்ளடக்கி உள்ளது.
இவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவு, பொருளாதார ஒத்துழைப்புடன் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கடந்த சனிக்கிழமை இரவு கோலாலம்பூரில் மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சுடன் இணைந்து சீனா பண்பாட்டு சுற்றுலா அமைச்சு சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.
சீனாவில் வசந்த கால விழாவாக அழைக்கப்படும் சீன புத்தாண்டு கொண்டாட்டம் மலேசியாவில் உள்ள பன்முக கலாச்சார சமூகத்தின் ஒற்றுமைக்குச் சான்றாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.


