சிரம்பான், ஜனவரி 24 - பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்களைப் பற்றி அறிந்த ஒரு தலைமுறையை உருவாக்க தேசிய கல்வி பாடத்திட்டத்தில் நிலைத்தன்மை பிரச்சினைகள் இணைக்கப்பட வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோ 'ஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக்கொண்டார்.
இயற்கையைப் பற்றி அக்கறை கொள்வதன் முக்கியத்துவத்தை நோக்கி இளைய தலைமுறையினரின் நடத்தை மற்றும் மனநிலையை வடிவமைப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் கூறினார்.
"நிலைத்தன்மை பிரச்சினைகள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும், அவை துணை பாடத்திட்டமாக இருந்தாலும் சரி அல்லது மறைமுகமாக திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் (பள்ளியில்) மூலம் இருந்தாலும் சரி" என்று அவர் மேலும் கூறினார்.
இன்று பாக்கியில் 800 பேர்கள் கலந்துக் கொண்ட நிகழ்வில் '' கல்வியாளர்கள் பார்வையில் மலேசிய மடாணி கொள்கை என்ற தலைப்பிலான உரையாடல் நிகழ்ச்சியில் மந்திரி புசார் அமிருடின் ஷாரி உரையாற்றினார்.
நிலையான எதிர்காலத்திற்காக, இந்த முயற்சியை உணர மாநில அரசு, கல்வி அமைச்சகம் மற்றும் பள்ளிகள் இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அமிருடின் கூறினார்.
" கல்வியில் அடிப்படை பாடங்களான, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கணிதம் போன்றவை முக்கியதுவமான கற்றலாக இருந்தாலும் நம்மை சுற்றியுள்ள தேவைகளை தத்துவங்களை கையாள்வது குறித்த இளைய தலைமுறையின் விழிப்புணர்வுக்கும், அறிவும் செயல்பாடும் மிக அவசியம். அதை நாம் தெளிவாக கையாள வேண்டும்" என்று அவர் கூறினார்.


