கோலாலம்பூர்,ஜன 24: இங்கு அருகே உள்ள பண்டார் பூச்சோங் ஜெயாவில் போலி டத்தோஸ்ரீ பட்டத்தைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் நடத்தி வந்த ஆயுர்வேத சிகிச்சை வளாகத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் டத்தோஸ்ரீ என்ற பெயர்கொண்ட ஆவணங்களும் அடங்கும்.
நேற்று, சுபாங் ஜெயா மாநகராட்சி மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து அந்த வளாகத்தை ஆய்வு செய்ததாக செர்டாங் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் ஏ.ஏ.அன்பழகன் தெரிவித்தார்.
ஆவணங்கள் தவிர, 54 வயதுடைய அந்நபரின் சீருடை மற்றும் சுவரொட்டியும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை, போலி டத்தோஸ்ரீ பட்டத்தைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபருக்கு எதிராக விசாரணை ஆவணங்களைத் திறந்ததாக ஏ.ஏ.அன்பழகன் அறிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் வைரலான ஒரு பதிவு தொடர்ந்து வலம் வருகிறது.
– பெர்னாமா


