ஷா ஆலம், ஜன 24: தேசிய எல்லையைத் தவிர அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வகுப்பு 1 (தனியார்) வாகனங்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
சீனப் புத்தாண்டு முன்னிட்டு இந்த தள்ளுப்படி வழங்கப்படுவதாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
முன்னதாக, இந்த ஆண்டு முதல்பண்டிகை காலங்களில் நெடுஞ்சாலை சுங்கவரியில் விலக்கு அளிக்கப்படாது என்று அலெக்சாண்டர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


