கூச்சிங், ஜன. 24 - சரவாக் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 100 பேராக உயர்ந்துள்ளது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 90 ஆக மட்டுமே இருந்தது.
சரடோக் மற்றும் டாட்டாவில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்தது.
சரடோக்கில் உள்ள டேவான் ரூமா டயாக்கில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் 10 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் டாட்டாவில் உள்ள ரூமா ஸ்டீவனில் தங்கியுள்ளனர்.
மலேசிய குடிமைத் தற்காப்புப் படையால் மாநிலம் முழுவதும் வெள்ள அபாயத்தில் உள்ள 26 இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.


