ANTARABANGSA

அமெரிக்காவின் தென் பகுதியை புயல் தாக்கியது - நால்வர் மரணம்

23 ஜனவரி 2025, 9:15 AM
அமெரிக்காவின் தென் பகுதியை புயல் தாக்கியது - நால்வர் மரணம்

வாஷிங்டன், ஜன 23 - அமெரிக்காவின் தென் பகுதியைப் பனிப்புயல் தாக்கியதில் நால்வர் மரணம் அடைந்தனர்.

இந்த குளிர்கால புயல் அமெரிக்காவின் தெற்கில் சில பகுதிகளில் பனி மற்றும் உறைபனி மழையைக் கொண்டு வந்தது. டெக்சாஸில் நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்ட சூழ்நிலையை உருவாக்கியதோடு தென்மேற்கு லூசியானாவில் முதல் பனிப்புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடக்கில், நியூயார்க் மாநிலத்தின் சில பகுதிகள் மற்றொரு புயலால் தாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை, அமெரிக்காவில் 2,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, மேலும் 3,000 விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டதாக ஒன்லைன் டிராக்கர் ஃப்ளைட் அவேர் ( online tracker flight Aware ) தெரிவித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.