கோலா லங்காட், ஜன. 23 - பிப்ரவரி 8 ஆம் தேதி மாநில அளவிலான சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஜென்ஜாரோமில் உள்ள ஃபோ குவாங் ஷான் டோங் ஜென் கோயில் மைதானத்தில் சிலாங்கூர் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வில் திரளான மக்களை இலக்காகக் கொண்டுள்ளது என முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இங் சீ ஹான் கூறினார்.
இந்நிகழ்வில் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
`Invest Selangor Bhd` உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படுள்ள இந்த கொண்டாட்டம், ஜனவரி 25 முதல் பிப்ரவரி 12 வரை சுமார் 15 ஹெக்டேர் பரப்பளவில் நடைபெறும் Lantern Festival மற்றும் மலர் கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
“இந்த சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் சிலாங்கூர் மக்களிடையே நல்லெண்ணம், பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் உணர்வைப் பிரதிபலிக்கிறது,
இவ்விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்காகக் கோயில் மைதானத்தில் 3 ஆயிரம் இலவச வாகன நிறுத்தம் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த கொண்டாட்டம் இரண்டு அமர்வுகளாக நடைபெறும், முதல் அமர்வு மாலை 5.30 மணிக்கும், இரண்டாவது அமர்வு இரவு 8.30 மணிக்கும் தொடங்கும், என்றார்.
- பெர்னாமா


