(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜன. 23 - புக்கிட் மெலாவத்தி மற்றும் ஈஜோக் சட்டமன்ற
ஒருங்கிணைப்பாளர்களின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் விழா இம்மாதம்
26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெஸ்தாரி ஜெயா எம்.பி.கே.எஸ். மண்டப
வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
பிற்பகல் 2.00 மணி தொடங்கி இரவு 9.00 மணி வரை நடைபெறும் இந்த
நிகழ்வில் பொங்கல் வைத்தல், உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், இசை
நாற்காலி, கயிறு இழுத்தல், வளைக்குள் பந்து, பந்தும் கரண்டியும்,
மிட்டாய் சேகரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகளில் பங்கேற்கும் பொது மக்களுக்கு கவர்ச்சிகரமான
பரிசுகளும் காத்திருக்கின்றன. அதேவேளையில் அதிர்ஷ்டக்குலுக்கில்
பரிசுகளை பெறும் வாய்ப்பினையும் அவர்கள் பெறுவர்.
புக்கிட் மெலாவத்தி தொகுதி ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்பிரமணியம்
மற்றும் ஈஜோக் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜைலானி காடீர்
ஆகியோரின் ஏற்பாட்டில் தொகுதி நகராண்மைக் கழக உறுப்பினர்கள்
மற்றும் இந்திய சமூகத் தலைவர்களின் ஆதரவுடன் இந்த தமிழர் திருநாள்
நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்வில் சுற்றுவட்டார மக்கள் திரளாக க் கலந்து சிறப்பிக்கும்படி
ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.


