ஷா ஆலம், ஜன. 21: நேற்று மதியம் தாமான் பெரிண்டஸ்ட்ரியன் காப்பார் இண்டா, கிள்ளானில் உள்ள மறுசுழற்சி ரசாயன பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான புகார் மாலை 4.23 மணிக்கு தனது தரப்புக்கு கிடைத்ததாகக் சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) துணை தலைவர் அஹ்மட் முக்லிஸ் மொக்தார் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
"சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த ஹஸ்மத் குழு (அபாயகரமான இரசாயன சிறப்புக் குழு) சோதனைகளை நடத்தியதாகவும், காற்று தரம் நல்ல நிலையில் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஹஸ்மத் குழு இன்னும் சம்பவ இடத்தைக் கண்காணித்து வருவதாகவும், மேலும், ஆய்வுகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் துறை காத்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில்,தொழிற்சாலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரசாயனங்களால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது என சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் உறுதி செய்தார்.
இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஹுசைன் கூறினார்.
– பெர்னாமா


