அலோர் ஸ்டார், ஜன. 21: இன்று காலை தோக்கோங் யார்டில் உள்ள வீடு ஒன்று தீப்பிடித்ததில் இருவர் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டு உதவி இயக்குநர் அசார் முகமட் கூறினார்.
"இச்சம்பவம் தொடர்பாக காலை 6.51 மணிக்கு தீயணைப்புப் படையினருக்கு அவசர அழைப்பு வந்தது. அந்த வீட்டில் மூன்று பேர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர்களில் ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்," என அசார் முகமட் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஜாலான் ராஜா மற்றும் அலோர் ஸ்டார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள், காலை 7.11 மணியளவில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்று அசார் கூறினார்
- பெர்னாமா


