NATIONAL

அழிந்து வரும் விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடும் கும்பல் முறியடிப்பு

20 ஜனவரி 2025, 7:42 AM
அழிந்து வரும் விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடும் கும்பல் முறியடிப்பு

கோலாலம்பூர், ஜன 20 : அழிந்து வரும் காட்டு விலங்குகளில் ஒன்றான `Prionailurus bengalensis` எனும் சிறிய காட்டுப் பூனைகளை, ஆயிரக்கணக்கான ரிங்கிட்டை செலவு செய்து வாங்க, ஆட்கள் தயாராக உள்ளது கண்டறியப்பட்டது.

`Kucing batu` அல்லது சிறுத்தைப் பூனை என்றும் அழைக்கப்படும் அப்பூனைகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு கள்ளச் சந்தையிலும் இணையத்திலும் விற்கப்படுகின்றன.

அரிய வகை விலங்குப் பிரியர்கள் மத்தியில், அதற்கு பெரும் வரவேற்பு உள்ளதாக வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான `PERHILITAN` தெரிவித்தது.

அண்மையில் கோலா லங்காட்டில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொண்ட சோதனையில், 2 சிறுத்தைப் பூனைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.

அதே வேளையில், 6 சருகுமான்களும் `Kijang` எனப்படும் 1 மானும் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டன.

இறைச்சிக்காகவும், விற்பதற்காகவும் அவற்றை சட்டவிரோதமாக வேட்டையாடிய 3 ஆடவர்கள் கைது ஆகினர்.

33,000 ரிங்கிட் மதிப்பிலானவை என நம்பப்படும் விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாக PERHILITAN கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.