கெய்ரோ/காஸா, ஜன. 20 - இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும்
இடையிலான போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து
ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் காஸா சாலைகளில் கூடி தங்கள்
மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த சந்தர்ப்பத்தில் பலர் போரில் பலியான தங்கள் உறவினர்களின்
கல்லறைக்குச் சென்று வேளையில் மேலும் பலர் தங்களின் குடியிருப்பு
எவ்வாறு உள்ளது என்பதை அறிய விரைந்தனர்.
நான் மீண்டும் உயர்மீண்டது போல் உணர்கிறேன் என்று மத்திய
காஸாவிலுள் டெய்ர் அல்-பாலா முகாமில் கடந்த ஓராண்டு காலமாக
அடைக்கலம் நாடியிருந்த ஆயா என்ற பெண்மணி கூறினார்.
பதினைந்து மாதங்களுக்கும் மேலாக பாலைவனத்தில் தாகத்தால்
பரிவித்தப் பின்னர் குடிப்பதற்கு நீர் கிடைத்தது போன்ற உணர்வு எனக்கு
ஏற்படுகிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் சொன்னார்.
தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே தீவிர
தாக்குதல்கள் நிகழ்ந்த வடக்கு பிரதேசத்தில் எண்ணற்ற மக்கள் இடிந்த
காங்கீரிட் சுவர்கள் இரும்புக் கம்பிகளுக்கு மத்தியில் முற்றாகச்
சீர்குலைந்த பகுதியின் ஊடே புழுதிபறக்கும் சாலையில் நடந்து செல்வதை
டிரேன் மூலம் எடுக்கப்பட்ட காணொணி காட்டியது.
பலர் இடிந்த வீட்டின் கற்குவியல்களை அகற்றும் பணியில்
ஈடுபட்டிருப்பதையும் வேறு சிலர் ரிக்ஷா மற்றும் டிரக்குகளில் தங்கள்
உடமைகளை ஏற்றிக் கொண்டு சொந்த ஊர்களுக்கு பயணிப்பதையும் காண
முடிந்தது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே நாங்கள் இங்கு வந்து
விட்டோம் என்று முற்றாக இடிந்த தனது வீட்டின் முன்புறம் நின்றிருந்த
அமால் அபு எய்டா என்ற ஆடவர் தெரிவித்தார்.
எங்களுக்கு புகலிடம் அளிப்பதற்கு ஒரு சிறிய அறை எஞ்சியிருந்தால் கூட
போதுமானது என்ற எண்ணத்தில் இங்கு வந்தோம். ஆனால் நிலைமை
பேரிடியை ஏற்டுத்தும் விதமாக உள்ளது என்றார் அவர்.
இஸ்ரேலின் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காக பல மாதங்களாக
வெளியில் காணப்படாத நீலநிற சீருடையணிந்த பாலஸ்தீன
போலீஸ்காரர்கள் பல இடங்களில் பணியில் ஈடுபட்டுள்ளதை காண
முடிந்தது.


