செமினி, ஜன. 20 - மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய மரியாதையும் கருணையும் காட்டுமாறு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.
நேள்று காலை இங்கு தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தின் " ரைட் 4 யுவர் ஹார்ட்" எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியப் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், #bikeisable Anak Syurga Luar Biasa எனும் அமைப்பின் நிறுவனர் வீரா சுதேப்ஜா ராபு, அவரின் மனைவி முர்னி டோனா மற்றும் பெருமூளை வாதம் கொண்ட அவர்களின் பிரத்தியேகக் குழந்தை நூர் வாதிஹான் ஆகியோரை தாம் வாழ்த்துவதாகவும் சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டார்.
பொழுது போக்கு நடவடிக்கைகளைத் தவிர்க்க தனது உடல் குறைபாட்டை ஒரு சாக்காகப் பயன்படுத்தாத நூர் வாடிஹானின் பெற்றோரின் ஊக்கமளிக்கும் குணத்தைப் பாராட்டிய அமிருடின், கடந்த ஆண்டு ரவாங் பைபாஸ் ஹாஃப் மாரத்தோன் நிகழ்வில் அவரை குடும்பத்துடன் சந்தித்த நினைவு கூர்ந்தார்.
கெமாமன் நகரில் ஒரு மாற்றுத் திறனாளி நபர் சம்பந்தப்பட்ட ஒரு சமீபத்திய சம்பவம் பற்றிய விவாதங்களுக்கு மத்தியில், இத்தகைய பிரத்தியேகத் தரப்பினர் மீது நாம் அனைவரும் எப்போதும் கருணையுடன் இருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன் ... ஒரு அன்பான சமூகத்தை உருவாக்க அதன் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள் என்றார் அவர்.
ஒருவர் தன்னைக் கவனித்துக்கொள்வது போல் மற்றவர்களைக் கவனித்துக்கொள்வதன் நற்பண்பு குறித்து நபிகள் நாயகத்தின் கருத்துகளை மேற்கோள் காட்டிய அமிருடின், வீரா சுதேப்ஜா, முர்னி மற்றும் அனைத்து பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் வலிமையும் விடாமுயற்சியும் வழங்க பிரார்த்திக்கிறேன் என்றார்.
இந்த உன்னத முயற்சிகளுக்கு மாநில அரசு தொடர்ந்து உதவி மற்றும் ஆதரவளிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.


