ஷா ஆலம், ஜனவரி 19: தேசிய ஆண்கள் இரட்டையர் ஜோடி கோ ஸ்ஸே பெய் -நூர் இஸுதீன் ஜோடி இந்தியா பொது பூப்பந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினர், இதற்கு முன்பு இந்தியாவின் வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டியை தோற்கடித்தனர்.
உலக நம்பர் 2 இரட்டையர் ஜோடி 38 நிமிடங்களில் 21-18,21-14 என்ற கணக்கில் வென்றது.
நாளை, மலேசிய பொது சாம்பியனான தென் கொரியாவின் கிம் வோன் ஹோ-சியோ சியுங் ஜேயை கோ ஸ்ஸே பெய் -நூர் இஸுதீன் எதிர்கொள்வார், அவர்கள் ( கிம் வோன் ஹோ-சியோ சியுங் ஜே) மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூயி யிக்கை 22-20,21-19 என்ற செட் கணக்கில் 42 நிமிடங்களில் தோற்கடித்தார்.


