கோலாலம்பூர், ஜன 19 ;- தேசிய கலப்பு இரட்டையர் ஜோடி, கோ சூன் ஹுவாட்-ஷெவோன் லாய் , 2025 இந்தியா பொது பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற நம்பிக்கைகள் இன்றைய அரையிறுதியில் தோல்வி அடைந்த பின்னர் சிதைந்தன.
புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற 51 நிமிட போட்டியில் உலகின் இரண்டாவது நம்பர் ஜோடி ஜியாங் ஜென்பாங்-வேய் யாக்சின் ஹுவாட் (சீனா) -ஷெவோன் லாய் ஜெமியை (மலேசிய) ஜோடியை தோற்கடித்தனர்.
இந்த ஜோடி முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் வென்றது, ஆனால் சீன ஜோடி அடுத்த இரண்டு செட்களை 21-19,21-9 என்ற கணக்கில் வென்றது.
அதேபோல், தேசிய மகளிர் இரட்டையர் ஜோடியான பியர்லி தான்-எம். தீனா, தென் கொரியாவின் கிம் ஹை ஜியோங்-காங் ஹீ யோங்கிற்கு எதிரான , மற்றொரு அரையிறுதி போட்டியில் 18-21,18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர்.
அவர்களின் விளையாட்டு " நிலைத்தன்மையற்றும் "... எதிரணியின் ஷாட்களை முடிக்க அவசரப் படுவது மற்றும் உண்மையில் விளையாட்டு செயல் திறன் வெளிப்படுத்த வில்லை. அதுதான் நாங்கள் எப்போதும் மீண்டும் மீண்டும் செய்யும் தவறு "என்று பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (பி. டபிள்யூ. எஃப்) பகிர்ந்த ஆடியோ மூலம் பியர்லி தான் கூறினார்.


