NATIONAL

சுகாதார கிளினிக்குகளில் வசதிகளை மேம்படுத்த RM200,000 ஒதுக்கீடு

17 ஜனவரி 2025, 9:44 AM
சுகாதார கிளினிக்குகளில் வசதிகளை மேம்படுத்த RM200,000 ஒதுக்கீடு

உலு லங்காட், ஜன 17: சுங்கை சுவா சுகாதார கிளினிக்கில் படிக்கட்டுகள் மற்றும் நடைபாதைகள் அமைப்பதற்காக பாங்கி நாடாளுமன்றத்திற்கு மொத்தம் RM101,512 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

``Projek Mesra Rakyat 2024`` திட்டத்தின் வழி பெறப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் தினமும் கிளினிக்கிற்கு வருபவர்கள் சுமார் 700 பேர் பயனடைந்ததாகப் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் சயரெட்சன் ஜோஹன் கூறினார்.

இது 2024 ஆம் ஆண்டிற்கான மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும்.

கடந்த ஆண்டில் சுகாதார கிளினிக்குகளில் வசதிகளை மேம்படுத்துவதற்காக பாங்கி நாடாளுமன்றத்திற்கு மொத்தம் RM200,000 ஒதுக்கப்பட்டது. இதில் பாங்கி சுகாதார கிளினிக் மற்றும் சுங்கை சிகாமட் ஹெல்த் கிளினிக் ஆகியவையும் அடங்கும்.

"பாங்கி சுகாதார கிளினிக்கில், வாகனம் நிறுத்தும் இடத்தை மேம்படுத்துவதற்கு சுமார் RM50,000 ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுங்கை சிகாமட் கிளினிக்கிலும் உபகரணங்கள் வாங்குவதற்கு RM50,000 வழங்கப்பட்டது," என்று அவர் கூறினார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.