கோலாலம்பூர், ஜன 17: நேற்று பிற்பகல் கம்போங் மெலாயு, ரவாங்கில் உள்ள சூராவ் அல்-ஹிடாயாவுக்கு அருகில் பெண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது
சூராவ் பகுதியில் பிற்பகல் 2.30 மணியளவில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது என கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் நூர் அரிஃபின் முகமட் நசீர் கூறினார்.
“சம்பந்தப்பட்ட குழந்தை தொப்புள் கொடியுடன் போர்வையில் சுற்றப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. குழந்தையின் எந்த அடையாளமும் இன்னும் தெரியவில்லை.
குழந்தையின் உடல், மேல் நடவடிக்கைக்காகக் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உடலை ரகசியமாக அப்புறப்படுத்தி பிரசவத்தை மறைத்த குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டம் பிரிவு 318ன் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த நபர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு நூர் அரிஃபின் கேட்டுக் கொண்டார்.
"பொதுமக்கள் குற்றப் புலனாய்வு அதிகாரி, இன்ஸ்பெக்டர் சித்தி கதிஜா இப்ராஹிமை 010-9073483 என்ற எண்ணில் அல்லது கோம்பாக் மாவட்ட காவல்துறை நடவடிக்கை அறையை 03-61262222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.


