NATIONAL

மாநில அரசின் திட்டங்களைப் பொதுமக்களிடம் பகிர முயற்சி

17 ஜனவரி 2025, 9:34 AM
மாநில அரசின் திட்டங்களைப் பொதுமக்களிடம் பகிர முயற்சி

காஜாங், ஜன 17: சீனப் புத்தாண்டை முன்னிட்டு மாநில அரசின் திட்டங்களை வீடு வீடாகச் சென்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் பகிர்ந்து கொள்வார்.

மாநில அரசு வழங்கிய பல்வேறு உதவிகளை, குறிப்பாக ஜோம் ஷோப்பிங் வவுச்சர்களை விளம்பரப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சியாஹ்ரெட்சன் ஜோஹன் கூறினார்.

“பாங்கி நாடாளுமன்றத்தில் 38 சதவீதம் பேர் சீனர்கள் ஆவர், இந்நடவடிக்கையின் போது அவர்களுக்கு ஆரஞ்சு பழங்கள் மற்றும் அங் பாவ் வழங்கப்படும்.

"இந்த வருகையின் போது குடியிருப்பாளர்களுக்கு உதவி தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அவர்களைப் பரிந்துரைப்பதன் மூலம் நாங்கள் உதவுவோம்," என்று அவர் கூறினார்.

முன்னதாக, சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஜோம் ஷோப்பிங் பிராயான் வவுச்சர்களுக்கு RM4.76 மில்லியன் ஒதுக்கியுள்ளதை மாநில அரசுக்கு வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும், RM200 மதிப்புள்ள 23,800 வவுச்சர்கள், தொகுதி அலுவலகங்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களால் விநியோகிக்கப்படும் என்று வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.