குண்டாசாங், ஜன-17; நேற்று காலையிலிருந்து பெய்த கனமழையால் சபாவில் அமைந்துள்ள குண்டாசாங்கில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் ஹோம்ஸ்டே மையம் ஒன்று பாதிக்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு ஏற்பட்ட அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் கண்காணிப்பை மேற்கொண்ட தீயணைப்பு மீட்புத் துறையினர் அதன் சுற்று வட்டார மக்களை வேறு இடங்களுக்கு மாறிச் செல்ல அறிவுறுத்தினர்.
மாலை 6 மணி அளவில் தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை முடிவுற்றது.


