கோலாலம்பூர், ஜன 17: ஒளிபரப்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட கள்ளப்பண பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு 'ஓப் ரகடா' (Op Ragada) மூலம் கைது செய்யப்பட்ட நால்வரில் முன்னாள் மேயர் ஒருவரும் அடங்குவார். மேலும், கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பெண்களாவர்.
கூச்சிங், சரவாக்கில் இந்த அனைத்து கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அங்குள்ள நிறுவனம் ஒன்றிலிருந்து 32 ஆவணங்களை காவல்துறையினர்
பறிமுதல் செய்ததாக தேசியக் காவல்துறை படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு சரவாக்கில் உள்ள ஒளிபரப்பு நிலையம் ஒன்றின் உயர் நிர்வாக அதிகாரி உட்பட 26 முதல் 62 வயதிற்குட்பட்ட ஐவரை காவல்துறையினர்
முன்னதாகக் கைது செய்திருந்தனர்.
அவர்கள் சந்தேகத்திற்கிடமான நிதி பரிவர்த்தனைகள்,டெண்டர் மோசடி மற்றும் தங்களுக்கு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு டெண்டர்களை வழங்குவதன் மூலம் பணமோசடி செய்தல் போன்ற குற்றச் செயல்களை மேற்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.


