கோலாலம்பூர் , ஜன 16: நேற்று தொடங்கி ரஹ்மா அடிப்படை உதவித் தொகையை (சாரா) மக்களுக்கு விநியோகம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
மக்களின் நல்வாழ்விற்கு உத்தரவாதம் அளிக்கும் முயற்சியாக ரஹ்மா உதவித் தொகை, எஸ்திஆர் மற்றும் சாரா உதவி திட்டத்திற்கு கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட 10 பில்லியனை விட அதிகமாக 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 1300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது ( 13 பில்லியன் ).
இ-காசே பதிவில் உள்ள ஏழை மற்றும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கான நிதி, 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 1,200 ரிங்கிட்டைக் காட்டிலும் இவ்வாண்டு 2,100 ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளதை நிதி அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
2025இல் ஜனவரி முதல் மார்ச் வரை மாதத்திற்கு 100 ரிங்கிட் சாரா உதவித்தொகையை மைக்காட்டின் வழி மக்கள் பெறுவதோடு ஏப்ரல் தொடங்கி அதன் விகிதம் மாதத்திற்கு 200 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.
அதோடு, எஸ்திஆர் உதவியை பெறும் 54 லட்சம் பேர், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி, சாரா கூடுதல் உதவியையும் பெறுவார்கள் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், குடும்பங்களுக்கு வழங்கப்படும் சாரா கூடுதல் உதவிதொகை ஒரு மாதத்திற்கு 100 ரிங்கிட் என்று நிதி அமைச்சு குறிப்பிட்டது.


