பெட்டாலிங் ஜெயா, ஜன 16: பத்து ஆராங், ரவாங்கில் வெப்ப சுத்திகரிப்பு நிலையம் அல்லது எரியூட்டியை அமைப்பதற்கான திட்ட அனுமதியை (KM) மாநில அரசு இன்னும் பெறவில்லை.
அனைத்து தரப்பினருக்கும் சாதகமான நிலையை உறுதிசெய்யும் வகையில் இந்நடவடிக்கையின் திட்டமிடல் கவனமாக செய்யப்பட வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"இந்த திட்டத்திற்கு இன்னும் திட்ட அனுமதி கிடைக்கவில்லை.இந்த திட்டத்தின் மூலம் குப்பைகளை சரியான முறையில் நிர்வகிக்க முடியும்.
"நாங்கள் விவாதித்து வருகிறோம். அனைவருக்கும் சாதகமான சூழ்நிலை ஏற்படுவதை உறுதி செய்வோம்" என்று செய்தியாளர்களின் சந்திப்பின் போது மந்திரி புசார் கூறினார்.
இந்த ஆண்டு ஜெராமிலும், தஞ்சோங் டுவா பெலாஸ்,கோலா லங்காட்டிலும் உள்ள எரியூட்டும் ஆலைகளின் கட்டுமான பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமிருடின் மேலும் கூறினார்.


