கோலாலம்பூர், ஜன. 16- அனைத்துலக கால்பந்து சம்மேளனத்தின் (பீஃபா)
நடுவர்களாக இவ்வாண்டு பதிவு செய்வதற்கு 23 மலேசியர்களை அந்த
கால்பந்து சம்மேளனத்தின் அனைத்துலக நடுவர்கள் குழு
தேர்ந்தெடுத்துள்ளதாக மலேசிய கால்பந்து சங்கம் கூறியது.
பீஃபா வெளியிட்டுள்ள பட்டியலில் ஆறு நடுவர்கள், எட்டு உதவி
நடுவர்கள், மூன்று புட்சால் நடுவர்கள் மற்றும் இரண்டு கடற்கரை
கால்பந்து நடுவர்கள் இடம் பெற்றுள்ளதாக கால்பந்து சங்கம் தனது
பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.
இந்த நடுவர்கள் பட்டியலில் நான்கு பெண்களும் இடம் பெற்றுள்ளதாகவும்
ஒரு நடுவர், இரண்டு உதவி நடுவர்கள் மற்றும் ஒரு புட்சால் நடுவர்
ஆகியோரை அந்த நால்வராவர் என்றும் அது குறிப்பிட்டது.
ஆறு கால்பந்து நடுவர்கள் பட்டியலில் கடந்த 2016 முதல் பீஃபா நடுவராகப்
பணியாற்றி வரும் முகமது நஸ்மி நசாருடின் முன்னிலை வகிக்கிறார்.
ரோஸ்லான் ஜோப்ரி அலி, துவான் முகமது யாசின், துவான் முகமது
ஹனாபியா, உசைட் ஜமால், காமில் ஜக்காரியா, இஸூல் பிக்ரி
கமாருஸமான் ஆகியோர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய
நடுவர்களாவர்.
பீஃபா அங்கீகாரம் பெற்ற நடுவர்கள் குறிப்பாகப் பெண்களின்
எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மலேசிய கால்பந்து சங்கம் வகுத்துள்ள
2023-2030 இரண்டாம் கட்ட வியூகத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த
நியமனம் அமைகிறது என்று அந்த அறிக்கை கூறியது.


