ANTARABANGSA

காஸாவில் போர் நிறுத்தம் - இறுதிக் கட்டத்தில் பேச்சு வார்த்தை

15 ஜனவரி 2025, 3:33 AM
காஸாவில் போர் நிறுத்தம் - இறுதிக் கட்டத்தில் பேச்சு வார்த்தை

டோஹா (கத்தார்), ஜன.14 - காஸா போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில்  ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு விரைவில்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கத்தார் நேற்று தெரிவித்ததாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய பிரச்சனைகளில் முக்கிய தடைகள் தீர்க்கப்பட்டு, ஒப்பந்த வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

டோஹாவில் தற்போதைய விவாதம் மீதமுள்ள விவரங்களை இறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது என்று டோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கத்தார் வெளியுறவு அமைச்சின்  செய்தித் தொடர்பாளர் மஜீட் அல்-அன்சாரி கூறினார்.

காஸா போர்நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவது கூடிய விரைவில்  நடைபெறும் என்றும் அன்சாரி தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தைகளில் சாதகமான சூழல் நிலவி வருகிறது. மேலும்,  உடன்பாட்டை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதே சமயம்  நாங்கள் அதீத  நம்பிக்கையுடனும் இருந்துவிட முடியாது  என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.