கோலாலம்பூர், ஜன. 15 - கோலாலம்பூர் மருத்துவமனையிலிருந்து கடந்த
வெள்ளிக்கிழமை காணாமல் போனதாகக் கூறப்படும் 65 வயது முதியரைக்
கண்டுபிடிப்பதில் பொது மக்களின் உதவியை காவல்துறை நாடியுள்ளது.
ஹூசேன் ஓத்மான் என்ற அந்த முதியவர் காணாமல் போனது தொடர்பில்
அன்றைய தினம் இரவு 7.15 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக
டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அப்பாண்டி
கூறினார்.
அன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் கோலாலம்பூர்
மருத்துவமனையின் 5வது மாடியிலுள்ள 24வது வார்ட்டிலிருந்து அந்த
முதியவர் வெளியேறியதாக அவர் சொன்னார்.
நரைத்த முடியுடன் 168 சென்டிமீட்டர் உயரம் கொண்ட ஹூசேன் மூக்கு
கண்ணாடி அணிந்திருந்ததோடு ஊன்றுகோலையும் பயன்படுத்தினார்.
பழுப்பு நிற கால் சட்டையும் அதே நிறத்தில் சட்டையும் அணிந்திருந்த
அவர் கையில் பிளாஸ்டிக் பொட்டலம் ஒன்றையும் வைத்திருந்தார் என
அவர் குறிப்பிட்டார்.
அந்த முதியவர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் 03-26002264 என்ற எண்களில்
டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு
மையத்தை தொடர்பு கொள்ளும்படி அவர் அறிக்கை ஒன்றில் கேட்டுக்
கொண்டார்.


